Wednesday 8th of May 2024 11:46:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னார் நீர் மூலகங்களை பாதுகாக்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு!

மன்னார் நீர் மூலகங்களை பாதுகாக்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு!


மன்னார் நகர பகுதியில் காணப்படும் நீர் மூலகங்களை பாதுகாக்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் வடிகால், நீர் கான்களை சுத்தப்படுத்தும் செயற்திட்டம் மன்னார் லியோ கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் மன்னார் நகர சபையின் ஒத்துழைப்புடன் லியோ கழக ஆலோசகர் திருமதி றெஜினா இராமலிங்கத்தின் தலைமையில் இன்று சனிக்கிழமை (23) காலை இடம்பெற்றது.

மன்னார் நகர் பகுதியில் அதிகம் நீர் வழிந்தோடும் எமில் நகர் பகுதியில் காணப்படும் கால்வாய்களில் காணப்படும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்பகுதி மக்களுடன் இணைந்து அகற்றும் செயற்பாடு மேற்படி முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் நகர் பிரதேச செயலாளர்,மன்னார் நகரசபை தலைவர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சின்னக்கடை, சாவற்கட்டு மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர்கள் ,ஜிம் பிறவுண் நகரில் நிர்மாணிக்கப்படும் 16 மலசலகூட பயனாளிகளின் குடும்பத்தினர், லியோ கழகத்தினருடன் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

நீர் வாய்க்கால்களுக்கு அருகாமையில் கழிவு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நீர்நிலைகளில் வீசுவதை தவிர்க்கும் முகமாக தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE